வெசாக் தன்சல் கூட்டத்தில் கார் மோதி கோர விபத்து; 6 பேர் பலி!


வெசாக் வாரத்தை முன்னிட்டு கொழும்பு – மீகொடை சந்தி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தானசாலையில் உணவு பெற்றுக்கொள்ள வரிசையில் காத்திருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு (மே 31) இடம்பெற்ற இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளை மற்றும் பிலியந்தல பகுதிகளைச் சேர்ந்த 15, 32, 35, 38 மற்றும் 56 வயதுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 3 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் பாடசாலை வயதுடைய ஒரு சிறுமி அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.