பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் பணிகள் ஆரம்பம்!


பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாதாந்திர 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மாதந்தோறும் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்ததாக அதன் உப தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை வழங்கப்படாத நிலுவைத் தொகைகளுடனும் இணைத்து இக்கொடுப்பனவை வழங்கும் பணிகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.