கடைக்கு சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை; வர்த்தகர் கைது!
5 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வந்த கடைக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
இதையடுத்து, சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Tags:
இலங்கை செய்தி
