தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!


2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சையின் இரண்டாம் பகுதி வினாத்தாள் காலை 09.30 மணி முதல் 10.45 மணி வரை நடைபெறவுள்ளதுடன், முதலாம் பகுதி வினாத்தாள் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை நடத்தப்படவுள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.