பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - உயிரிழப்பு 32 ஆக உயர்வு!


பிலிப்பைன்ஸில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் மேலும் 114 பேர் காயமடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஜெர்மனிய புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் அண்டை நாடான இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் இந்தோனேசியாவுக்கான எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.