கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை – 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!


கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையின் போது 32 மோட்டார் சைக்கிள்களும் 1 முச்சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது ஆவணங்கள் இன்றி வாகனம் செலுத்துதல், காப்புறுதி இல்லாமை, சாரதி அனுமதிப்பத்திரமின்றி ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமை, அதிக வேகம் மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

மேலும், 117 போக்குவரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.