தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு!


தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் உடுகாவ பகுதியில் சாரதிகள் மற்றும் பயணிகள் ஓய்வெடுக்க அறையொன்றை அமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சி.கே. பெரேரா நேற்று (29) இதற்கான அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்த ஓய்வுப் பகுதி மாத்தறையில் உள்ள கொடகம மற்றும் கொக்மாடுவ இடையேயான 119 கிலோமீட்டர் எல்லைக்கு அருகில் கட்டப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.