உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 3.55% குறைந்து ஒரு பீப்பாய்க்கு 83.77 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோல், WTI மசகு எண்ணெய் விலை 4.10% குறைந்து 80.78 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
மேலும், மேர்பன் ரக மசகு எண்ணெய் 4.23% வீழ்ச்சியடைந்து 83.02 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் காரணமாக எண்ணெய் விலை உச்சத்தை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அண்மையில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள் மற்றும் சந்தை எதிர்பார்ப்புகள் காரணமாக எண்ணெய் விலை படிப்படியாக வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Tags:
உலகம்
