meningitis வைரஸ் : பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!


தற்போது பரவி வரும் என்டரோ வைரஸினால் ஏற்படும் மெனின்ஜயிடிஸ் நோய் தொடர்பில் செயற்பட வேண்டிய விதம் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கமைய கல்வியமைச்சிற்கு இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் நோய் பரவாமல் இருப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்வியமைச்சு பாடசாலைகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

மெனின்ஜயிடிஸ் நோய் வைரஸ் ஊடாக பரவும் நோயாகும். இது சிறுவர்கள் உட்பட நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் நபர்களை அதிகமாக தாக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கத்திற்கு உள்ளான சிலர் கடந்த ஏப்ரல் மாதம் மாத்தறை தெனியாய பகுதியில் அடையாளம் காணப்பட்டனர். தற்போது நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் நோய் பரவியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர்கள் அதிகம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் மாணவர்கள் மத்தியில் நோய் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.