இலங்கை–நியூசிலாந்து கல்வி ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை!
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், நியூசிலாந்தின் உயர்கல்வி அமைச்சர் பென்னி சிம்மன்ஸ்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, நியூசிலாந்தில் இலங்கை மாணவர்களுக்கான கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
குறிப்பாக, இலங்கை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்குதல், தொழிற்பயிற்சி வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பும் ஆக்கபூர்வமாக கருத்துகளைப் பரிமாறிக் கொண்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் (X) தள பதிவில் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
