வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் பாராளுமன்றிற்கு வருகை!
வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாம் உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்று பாராளுமன்றத்திற்கும் வருகை தந்துள்ளார்.
பாராளுமன்ற வளாகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி டோ லாம் அவர்களுக்கு செங்கம்பள வரவேற்புடன் சிறப்பான மரியாதையும் அளிக்கப்பட்டது.
இதன்போது, அவர் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து வரவேற்றனர்.
அவரது உரையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு பாராளுமன்ற அமர்வு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
