மரக்கறி விலைகள் தொடர்பில் வெளியான தகவல்!
நாட்டில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக மரக்கறி விநியோக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் விளைவாக, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் உயரக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தற்போதைய மழைக்கால நிலைமை இன்னும் சில நாட்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சந்தைகளுக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறையக்கூடும் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபாசேன, தற்போது ஓரளவு மரக்கறி விநியோகம் இடம்பெற்று வருவதாகவும், ஆனால் அடுத்த சில நாட்களில் விநியோக தட்டுப்பாடு உருவாகும் சாத்தியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
விநியோகம் குறையும் பட்சத்தில் சந்தையில் மரக்கறி விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்கள் சந்தைகளுக்கு வருவது குறைந்துள்ளதுடன், விற்பனை நடவடிக்கைகளும் மந்தமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
