இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்க வரியில் மாற்றம்!


இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க வரி அமைப்பில் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, இறக்குமதி தீர்வை வரி மீது 50 சதவீத மேலதிக வரி விதிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதியின் அனுமதியுடன் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பின் படி, இந்த புதிய வரி நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது. மேலும், இந்த மேலதிக வரி அடுத்த 3 மாத காலத்திற்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மே 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் கடன் கடிதங்கள் (Letter of Credit) திறக்கப்பட்டுள்ள வாகனங்களுக்கு இந்த வரி மறுசீரமைப்பு பொருந்தாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.