த.வெ.க ஆட்சியமைக்க தி.மு.க. எந்த வகையிலும் இடையூறாக அமையாது - மு.க. ஸ்டாலின் தெரிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்தவித தடையும் ஏற்படுத்தாது என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியலமைப்பு நெருக்கடியோ அல்லது மீண்டும் தேர்தல் நடைபெறும் சூழலோ உருவாகக் கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர், திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே மு.க. ஸ்டாலின் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
Tags:
இந்திய செய்தி
