லாஃப்ஸ் சமையல் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!


இன்று (6) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் சமையல் எரிவாயு விலைகள் உயர்த்தப்படுகின்றன.

அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் விலை 545 ரூபாயால் அதிகரித்து, 5,700 ரூபாயிலிருந்து 6,245 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டர் விலை 220 ரூபாயால் உயர்ந்து, 2,280 ரூபாயிலிருந்து 2,500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.