யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கீரிமலை நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தைக்கு நேற்று தாயார் பால் கரைத்து ஊட்டியுள்ளார்.

இதன் பின்னர், குழந்தை திடீரென விறைத்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக குழந்தை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக குழந்தையின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.