முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை உத்தரவு!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக இந்த உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Tags:
இலங்கை செய்தி
