முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்திக்கவுள்ள முதலமைச்சர் விஜய்!
தமிழக முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக அவரது ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் இன்று சந்திக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், அதனைத் தொடர்ந்து பல மூத்த அரசியல் தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் நேற்றைய தினம் பதவியேற்ற நிலையில், தமிழகத்தின் 17வது சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது.
பதவியேற்புக்குப் பிறகு முக்கிய அரசியல் தலைவர்களை சந்திக்கும் திட்டத்தில் முதலமைச்சர் விஜய் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவரது ஆழ்வார்பேட்டை இல்லத்தில் நேரில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tags:
இந்திய செய்தி
