பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
2024 மற்றும் 2025 ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் உறுப்பினர் தேவானந்த சுரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இந்த தகவல்களை வெளியிட்டார்.
அதன்படி, பாடசாலைக்கு செல்லாததாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 711 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 885 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும், பாடசாலைகளில் மீண்டும் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 570 ஆகவும், 2025 இல் 777 ஆகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கல்வி வாய்ப்புகளுடன் இணைக்கப்படாத மாணவர்களின் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் 28 ஆகவும், 2025 ஆம் ஆண்டில் 34 ஆகவும் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 597 ஆக இருந்த நிலையில், 2025 இல் அது 301 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், பாடசாலைகளில் இதுவரை சேர்க்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 2024 இல் 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் உயர்ந்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
