நாட்டில் இன்று திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை!
இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (29) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நேற்று (28) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 383,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 4,000 ரூபாயால் அதிகரித்து 387,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 352,400 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 3,600 ரூபாயால் அதிகரித்து 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
