ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் சீனா விஜயம்!


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சீனப் பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாதிமீர் புட்டின் எதிர்வரும் மே 19ஆம் திகதி முதல் இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக சீனா செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பயணத்தின் போது, ரஷ்யா – சீனா உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் புட்டின் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் தொடர்பாக இரு தலைவர்களும் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடவுள்ளதுடன், பல முக்கிய ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் சீனாவிற்கு தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் சீனப் பயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.