வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு - அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ விளக்கம்
வாகன இறக்குமதிக்கான தீர்வைக் கட்டணம் தற்காலிகமாக மூன்று மாதங்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எனினும், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் வாழ்வாதாரத் தேவைகளுக்கான தொழில் வாகனங்களுக்கு இந்த வரி அதிகரிப்பு எந்த வகையிலும் பொருந்தாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் வதந்திகளால் அமெரிக்க டொலருக்கு ஏற்படும் கூடுதல் அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்குத் தேவையான டொலர் கையிருப்பை பாதுகாப்பதுமே இந்த நடவடிக்கையின் நோக்கம் என தெரிவித்தார்.
அதன்படி, தனிப்பட்ட பயன்பாட்டுக்கான வாகன இறக்குமதிகளுக்கு மட்டுமே இந்த தற்காலிக தீர்வைக் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
Tags:
இலங்கை செய்தி
.webp)