உலகச் சந்தையில் மீண்டும் உயர்ந்த மசகு எண்ணெய் விலை!
உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.
அதன்படி, பிரெண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.44% அதிகரித்து, 111.7 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், டபிள்யூ.டி.ஐ. (WTI) வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.32 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் – அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலை மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தை இலக்காகக் கொண்ட சமீபத்திய தாக்குதல்கள் ஆகியவை இந்த விலை உயர்விற்கு காரணமாகக் கூறப்படுகின்றன.
Tags:
உலகம்
.webp)