மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் : தெனியாய பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் விடுமுறை!


மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்தில் கொண்டு, தெனியாய கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளை தொடர்ந்தும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெனியாய வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொட தெரிவித்துள்ளார்.

இதன்படி, தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூஸ் இருமொழிப் பாடசாலை மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளிலும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களிடையே காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதால், கடந்த 7 ஆம் திகதி முதல் இப்பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இதேவேளை, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறும், காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனை பெறுமாறும் சுகாதாரப் பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.