நாட்டின் பல பகுதிகளுக்கும் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை!
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் தாக்கம் தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது.
இன்று (09) இரவு 11.30 மணி வரை அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் முதல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது பலத்த மின்னல் தாக்கங்களும், தற்காலிகமாக வலுவான காற்றும் வீசும் சாத்தியம் காணப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
