தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் வீழ்ச்சி!


உலகச் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று கணிசமான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 64.75 அமெரிக்க டொலர்களால் குறைந்து, 4,612.61 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது கடந்த தினத்துடன் ஒப்பிடுகையில் 1.38 சதவீத வீழ்ச்சியாகும்.

இதேவேளை, வெள்ளியின் விலையிலும் குறிப்பிடத்தக்க சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 3.33 அமெரிக்க டொலர்களால் குறைந்து, 81.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இது 3.93 சதவீத வீழ்ச்சியாகும்.

உலகச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை மாற்றங்களின் தாக்கம் காரணமாக, உள்ளூர் சந்தையிலும் ஆபரணத் தங்கத்தின் விலையில் குறைவு ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.