இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்கும் முதல் வெளிநாடாக வியட்நாம்!
இந்தியாவும் வியட்நாமும் மீயொலிவேகப் பயண ஏவுகணை தொடர்பான முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை அமைப்பை கொள்வனவு செய்யும் முதல் வெளிநாடாக வியட்நாம் மாறியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 375 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை, உலகின் அதிவேக மீயொலிவேகப் பயண ஏவுகணைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஒலியின் வேகத்தை விட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, நவீன பாதுகாப்புத் துறையில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
Tags:
உலகம்
