கியூ.ஆர் குறியீட்டு முறைமையை பின்பற்றாமல் எரிபொருள் விநியோகம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!


கியூ.ஆர் (QR) குறியீட்டு முறைமையை பின்பற்றாமல் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எச்சரித்துள்ளது.

எரிபொருள் விநியோக செயல்முறையில் QR குறியீட்டு முறை கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என கூட்டுத்தாபனத்தின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.

மேலும், QR முறைமையை மீறி எரிபொருள் வழங்கும் நிலையங்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், எரிபொருள் விநியோகத்தில் ஒழுங்கு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.