அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று (18) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்களின்படி, ஒரு அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 326.74 ஆகவும், விற்பனை விலை ரூ. 334.26 ஆகவும் பதிவாகியுள்ளது.
மத்திய கிழக்கில் தொடரும் போர் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் தாக்கத்தால், ரூபாவின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
Tags:
இலங்கை செய்தி
