பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதலமைச்சர் விஜய்!


தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இன்று டெல்லியில் சந்தித்துள்ளார்.

இன்று மாலை நடைபெற்ற அரசியல் சந்திப்பின் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் அரசியல் மற்றும் நிர்வாகம் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் பல முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து வந்த விஜய், பதவியேற்ற சில வாரங்களிலேயே இந்திய பிரதமரை சந்தித்திருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், இந்த சந்திப்பில் பேசப்பட்ட முக்கிய அம்சங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.