கொள்ளுப்பிட்டியில் கைதான 74 வியட்நாம் பிரஜைகளுக்கும் விளக்கமறியல்!


கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் கைது செய்யப்பட்ட 74 வியட்நாம் நாட்டவர்களை எதிர்வரும் மே 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டுள்ளது.

இணையத்தின் மூலம் இடம்பெற்ற நிதி மோசடிகளில் தொடர்புடையதாகவும், விசா விதிமுறைகளை மீறியதாகவும் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.