பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு 2 வாரங்கள் அவகாசம்!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு அவசியமாகிறது.

இதனால், தமிழக வெற்றி கழகத்துக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க பிற கட்சிகளின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த சூழலில், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசமும் அவர் கோரியுள்ளார்.