தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் ராஜபக்ஷ வாழ்த்து!
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறப்பான வெற்றியை பதிவு செய்த நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜய்க்கு, இலங்கை பொதுஜன பெரமுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், “மாண்புமிகு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு இந்த மிகப்பெரிய வெற்றிக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். உண்மையான பொறுப்பு இப்போதுதான் தொடங்குகிறது.
எதிர்காலத்தில் வரும் சவால்களை வென்று, மக்களுக்கு அர்த்தமுள்ள நன்மைகளை வழங்குவதற்கான வலிமையும் உறுதியும் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் கிடைக்க என் நல்வாழ்த்துக்கள்.
மேலும், இரு நாடுகளின் மக்களையும் பாதிக்கும் முக்கியமான விடயங்களில் இலங்கையுடன் வலுவான மற்றும் நேர்மறையான உறவு உருவாகும் என நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி
