17 வயது இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பகுதியில் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று (16) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்த நிலையில், அண்மைய நாட்களாக சகோதரரின் இல்லத்தில் தங்கி இருந்ததாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று அதிகாலை அவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று உடலை மீட்டுள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில், உடல் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
