தவெக பலம் 120 ஆக உயர்வு! : ஆட்சியில் அமரும் விஜய்
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், தவெக தற்போது 107 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதுடன், கூட்டணி கட்சிகளின் ஆதரவால் அதன் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.
கூட்டணி நிலவரம்:
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) – 107
இந்திய தேசிய காங்கிரஸ் – 05
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) – 02
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) – 02
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) – 02
விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) – 02
மொத்தம் – 120
தமிழக சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை 118 இடங்கள் என்பதால், தவெக கூட்டணி தற்போது அதற்கும் மேற்பட்ட ஆதரவை பெற்றுள்ளது. இதனால், அக்கட்சித் தலைவர் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Tags:
இந்திய செய்தி
