விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் பகிரப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது திடீரென மாயம்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா பெயரில் பகிரப்பட்டதாக கூறப்படும் இன்ஸ்டாகிராம் பக்கம் தற்போது திடீரென மாயமாகியுள்ளமை இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக தமிழக அரசியலில் த.வெ.க தலைவர் விஜய்யின் நகர்வுகள் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அவரது மகள் திவ்யா சாஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்ததாக கூறப்படும் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலானது.
அதில், நடிகர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரப் புகைப்படத்துடன் ‘கண்ணே மணியே கண்ணிமையே’ என்ற பாடல் இணைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால், விஜய்யின் அரசியல் வருகைக்கு அவரது மகள் மௌனமாக ஆதரவு தெரிவித்ததாக ரசிகர்கள் கருத்து வெளியிட்டு வந்தனர்.
எனினும், அந்த இன்ஸ்டாகிராம் கணக்கு உண்மையிலேயே திவ்யா சாஷாவினுடையதா அல்லது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட போலி கணக்கா என்பது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கிடையில், அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தைத் தேடும்போது “User Not Found” எனக் காணப்படுகின்றது. அந்த பக்கம் நீக்கப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.
