பெற்ற மகனால் தந்தைக்கு நிகழ்ந்த கொடூரம்!
கூர்மையான ஆயுதத்தால் தாக்கி தந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மகன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிரஹபிட்டிய பகுதியில் நேற்று (24) காலை இந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில், அதிரஹபிட்டிய பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கும் அவரது மகனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தீவிரமடைந்ததன் பின்னரே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 33 வயதுடைய மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
