லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!


பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, லாஃப்ஸ் எரிவாயுவை நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி வழங்கும் நடவடிக்கைகள் இன்று (08) முதல் ஆரம்பிக்கப்படுகின்றன என அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, சம்பந்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்திற்கு தெளிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

மேலும், 7,000 மெட்ரிக் தொன் லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த 6ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்ததாகவும், அந்த கையிருப்பில் உள்ள எரிவாயுவை இன்று முதல் நுகர்வோருக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனுடன், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் சட்டவிரோத செயல்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.