இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை அறிமுகம்!
இலங்கையின் முதலாவது டிஜிட்டல் வாகன காப்புறுதி அட்டை, மே 1ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய டிஜிட்டல்மயமாக்கல் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கமும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் அட்டைகளை நீக்குவதன் மூலம் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
