முன்னாள் அமைச்சரான பிரேமலால் ஜெயசேகர கைது!


முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் போது, கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தனது துப்பாக்கியை காட்டி ஒருவரை அச்சுறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ நேரத்தில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிக்கான உரிமம் ஏற்கனவே காலாவதியானதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.