அமெரிக்காவின் காலக்கெடுவை தூக்கி எறிந்த ஈரான் ராணுவம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈரான் மீதான புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான செவ்வாய்க்கிழமை காலக்கெடுவை ஈரான் ராணுவம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் பேச்சுக்கள் "நாகரீகமற்றவை" என வர்ணித்துள்ள ஈரான், இது அமெரிக்காவின் இயலாமையையும், அந்நாடு சந்தித்துள்ள"முட்டுக்கட்டை" நிலையையுமே காட்டுவதாக தெரிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்கா விதித்த செவ்வாய்க்கிழமை காலக்கெடுவுக்கு ஈரான் அடிபணியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் 'காதம் அல்-அன்பியா' மத்திய கட்டளை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "அமெரிக்க ஜனாதிபதியின் ஆதாரமற்ற அச்சுறுத்தல்கள் எங்கள் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான எங்களது 'தாக்குதல் மற்றும் நசுக்கும் நடவடிக்கைகள்' திட்டமிட்டபடி தொடரும்" என எச்சரித்துள்ளார்.
Tags:
உலகம்
