தன்சல் பதிவுகள் ஆரம்பம்!
வரவிருக்கும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள அன்னதானங்கள் (Dansal) தொடர்பான பதிவுகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி. பொரலெஸ்ஸ தெரிவித்ததாவது:
அன்னதானங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளவர்கள், தங்களது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரிடம் முன்கூட்டியே தகவல் அளித்து, பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், அன்னதானம் நடைபெறும் இடம் மற்றும் வழங்கப்படவுள்ள உணவு அல்லது பான வகைகள் (உதாரணமாக: உணவு, குளிர்பானம் போன்றவை) குறித்து முழுமையான தகவல்களை உரிய அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பதிவுகளைத் தொடர்ந்து, அன்னதானங்களை சுகாதாரமான முறையில் நடத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அனைத்து ஏற்பாட்டாளர்களுக்கும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
