மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் - அதிகரித்த ஆணுறையின் விலை!
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மலேசியாவைத் தலைமையிடமாகக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆணுறை உற்பத்தி நிறுவனம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்த தீர்மானித்துள்ளது.
மூலப்பொருட்களின் கிடைக்கும்தன்மை குறைவதால், ஆணுறைகளின் விலை சுமார் 30% அல்லது அதற்கும் அதிகமாக உயரக்கூடும் என அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், அண்மைக் காலங்களில் உற்பத்திச் செலவுகள் கணிசமாக அதிகரித்துள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம் ஆண்டுதோறும் 5 பில்லியனுக்கும் மேற்பட்ட ஆணுறைகளை உலக சந்தைக்கு வழங்கி வருகிறது. அதேவேளை, 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் ஆணுறைகளுக்கான தேவை சுமார் 30% அதிகரித்துள்ளதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
உலகம்
