அஸ்வெசும பணம் தொடர்பில் வெளியான தகவல்!
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் நாளை (22) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 'அஸ்வெசும' திட்டத்தின் முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 617,406 முதியோருக்கான ஏப்ரல் மாதக் கொடுப்பனவாக 3 பில்லியன் 87 மில்லியன் 30 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவுள்ளது.
அத்துடன், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேற்பட்ட 72,525 முதியோருக்காக 362 மில்லியன் 6 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தப்படவுள்ளதாக அந்த சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:
இலங்கை செய்தி
