வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இராஜினாமா!


நிலக்கரி இறக்குமதி செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சுயாதீனமும் பக்கச்சார்பற்றதுமான விசாரணைக்கு வழிவகுக்கும் நோக்கில், வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால ஆகியோர் இன்று (17) பிற்பகல் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இவர்கள் தங்கள் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

நிலக்கரி இறக்குமதி மற்றும் அதனுடன் தொடர்புடைய மின்சார உற்பத்தி நடவடிக்கைகளில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோத செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பதை விசாரிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவால் இன்று (17) விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் முழுமையாக சுயாதீனமாகவும், பக்கச்சார்பின்றியும் நடைபெறுவதற்கான சூழலை உருவாக்கும் வகையில், அதற்கு ஆதரவாகவே இவர்கள் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.