மசகு எண்ணெய் விலை சடுதியாக அதிகரிப்பு!


ஈரான் மீதான துறைமுக முற்றுகை இன்னும் பல மாதங்களுக்கு நீடிக்கக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இதன் நேரடி தாக்கமாக சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீரென உயர்வு கண்டுள்ளது. ஜூன் 2022க்கு பிறகு முதன்முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 120 அமெரிக்க டொலரைத் தாண்டியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கிய பாதை எனக் கருதப்படும் Strait of Hormuz (ஹோர்முஸ் நீரிணை) தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பது, நீண்டகால மோதல்கள் உருவாகும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

மத்திய கிழக்கில் நிலவி வரும் அரசியல் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த திடீர் விலை உயர்வு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.