சிகிச்சையளித்த பெண் வைத்தியரிடம் அத்துமீறல்: நோயாளி கைது!
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் (Kalutara South Base Hospital (Nagoda Hospital)) பணியாற்றும் பெண் வைத்தியருக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றச்சாட்டில் நோயாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்துகம பிம்புர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறித்த நபர், மேலதிக சிகிச்சைக்காக நாகொட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அங்கு இரத்த அழுத்த பரிசோதனை செய்ய பெண் வைத்தியர் சென்றபோது, அவர் வைத்தியரின் மார்புப் பகுதியைத் தொட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து வைத்தியர் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும், பின்னர் மீண்டும் பரிசோதனை செய்யும் போதும் அதேபோன்ற செயல் மீண்டும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக வைத்தியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மஹகம, சமகிபுர, தென்னஹேன பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். உடல்நிலை காரணமாக அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சந்தேக நபர் இன்று (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
