சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்வு!


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் 100 அமெரிக்க டொலரை கடந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் உடன்படிக்கையை எட்டாததால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் வாய்ப்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட எச்சரிக்கையும் விலை உயர்விற்கு காரணமாகக் கருதப்படுகிறது.

இதன்படி, உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் விலை 104.5 அமெரிக்க டொலராகவும், ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 102.8 அமெரிக்க டொலராகவும் உயர்ந்துள்ளது.