கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு பிணையில் விடுதலை!


இஸ்லாமிய மார்க்கத்திற்கு அவதூறு விளைவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கில் அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.