சுமார் 30 முதல் 32 வீதமானோருக்கு ‘கொழுப்பு கல்லீரல்’ நோய்!
நாட்டின் நகர்ப்புறங்களில் வாழும் மக்களில் சுமார் 30 முதல் 32 வீதமானோர் கொழுப்பு கல்லீரல் நோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பதுளை போதனா வைத்தியசாலையின் இரைப்பை மற்றும் குடல் தொடர்பான விசேட நிபுணர் தெரிவித்துள்ளார்.
தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் உழைப்பின் குறைபாடு ஆகியவை இந்த நோயின் முக்கிய காரணிகளாகக் காணப்படுகின்றன. கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு தேக்கம் ஏற்படுவது, நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நிலைகளுடன் நெருங்கிய தொடர்புடையதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவுக் கட்டுப்பாடு மற்றும் முறையான சிகிச்சை மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தவும், பலருக்கு குணப்படுத்தவும் முடியும் என மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:
இலங்கை செய்தி
